சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கார்த்தி

Bookmark and Share

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கார்த்தி

‘பருத்தி வீரன்’, ‘பையா’, ‘கொம்பன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் இளைய மகனாவார். இவருடைய அண்ணன் நடிகர் சூர்யா, சமீபத்தில் சொந்தமாக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இந்நிறுவனம் மூலம் ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. எனவே, இதைத் தொடர்ந்து ‘ஹைக்கூ’, ‘24’ என இவர் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தியும் தனது அண்ணனை பின்பற்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம்.

இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக முதன்முதலாக இவர் நடித்து வரும் ‘கஷ்மோரா’ படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். 


Post your comment





Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions