மச்சான் செய்த தவறுக்காக நிரூபரை திட்டி தீர்த்த கார்த்தி...!

Bookmark and Share

மச்சான் செய்த தவறுக்காக நிரூபரை திட்டி தீர்த்த கார்த்தி...!

மெட்ராஸ், கொம்பன், நடிகர் சங்க தேர்தல் வெற்றி என உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி.

வெற்றி மனிதனை மாற்றுவது சகஜம் தான் என்றாலும், அந்த வெற்றியே கார்த்தியின் தலையில் கனத்தை ஏற்றிவிட்டதோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

பத்திரிகைக்காக சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பேட்டி கொடுத்ததோடு, அந்தப் பேட்டிக்காக பிரத்யேகமாக போட்டோசெஷனும் செய்துள்ளார்கள். இதில் எடுத்த புகைப்படங்களை தங்களுக்கு காட்டிய பிறகு தான் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர், சிவகுமார் குடும்பத்தினர். 

ஆனால் அதற்குள் இந்த புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பரவியதால், கார்த்தி அந்த பத்திரிக்கை நிரூபரை திட்டி தீர்த்து விட்டாராம். பிறகு தான் தெரிந்துள்ளது, அந்த புகைப்படங்களை சிவகுமார் மகளின் கணவர் வெளியிட்டார் என்று... இதை அறிந்த சிவகுமார் கார்த்தியை கண்டித்தது மட்டுமின்றி அந்த நிரூபரிடமும் தானே முன்வந்து மன்னிப்பு கேட்டாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions