கார்த்தியுடன் ஸ்ரீதிவ்யா ரொமான்ஸ்!

Bookmark and Share

கார்த்தியுடன் ஸ்ரீதிவ்யா ரொமான்ஸ்!

சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி ஸ்ரீதிவ்யாவை பரவலாக பேச வைத்ததோடு பல படங்களிலும் கமிட்டானார். ஆனால் அப்படி அவர் அதன்பிறகு நடித்த ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை படங்கள் மீடியமான ஹிட் என்பதால், ஸ்ரீதிவ்யா மீதான பரபரப்பு அடங்கி விட்டது.

தற்போது அவர் நடித்து ஈட்டி, பென்சில் ஆகிய படங்கள் வெளியாக தயார் நிலையில் இருந்தபோதும், இந்த படங்கள் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி இன்னமும் இழுத்தடித்துக்கொண்டு வருவதால் அவருக்கான எதிர்ப்பு இப்போது சுத்தமாக குறைந்து விட்டது.

இந்த நேரத்தில், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படவாய்ப்பு கிடைத்திருப்பது ஸ்ரீதிவ்யாவுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது.

இதே படத்தில் நயன்தாராவும் இருந்தபோதும், ஸ்ரீதிவ்யாவுக்கும் நல்ல கேரக்டர்தானாம். அதனால், இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து கால்சீட்டுகளை வாரி வழங்கியுள்ள ஸ்ரீதிவ்யா, தற்போது சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்று வரும் காஷ்மோரா படப்பிடிப்பில் கார்த்தியுடன் காம்பினேசன் காட்சிகளில் நடித்து வருகிறார்.

குறிப்பாக, ரொமான்ஸ் காட்சிகளில் முந்தைய படங்களை மிஞ்சும் வகையில், கார்த்தியுடன் கட்டிக்கலந்தாடிக் கொண்டிருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions