
கார்த்தி, நாகார்ஜுனா முதல் முறையாக இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது.
ஆனால், அவர் திடீரென கால்ஷீட் பிரச்சனைகளால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை, அதனால் விலகிக் கொள்கிறேன் என்றார். இந்தத் தகவலை மீடியாக்களுக்குத் தெரிவித்த, தயாரிப்பு நிறுவனம், தொடர்ந்து ஸ்ருதிஹாசன் மீது இது தொடர்பாக வழக்கையும் தொடர்ந்தது.
அதன் பின், ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்தன. இது குறித்து நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
மறுபக்கம், ஸ்ருதிஹாசன் தயாரிப்பு நிறுவனத்திடம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளச் சொன்னதாகவும், எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து தேதிகளைத் தருவதாகவும் பேசி வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இப்போது, தமன்னா, கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என்று கார்த்தியின் மக்கள் தொடர்பாளர் அறிவித்துள்ளார். கார்த்தி, தமன்னா ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருவருக்குள்ளும் ஒரு காலத்தில் காதல் இருந்ததாக கிசுகிசு எழுந்த நிலையில் கார்த்திக்கு திடீரென திருமணம் நடைபெற்றதும், தமன்னா தமிழ்ப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Post your comment
Related News | |
▪ | துபாய் செல்லும் கார்த்தி-தமன்னா |
![]() |