கார்த்தியை காப்பி அடிக்க மாட்டேன்: வர்மா சொல்கிறார்

Bookmark and Share

கார்த்தியை காப்பி அடிக்க மாட்டேன்: வர்மா சொல்கிறார்

அகத்திணை படத்தில் அறிமுகமானவர் வர்மா. பிசியோதெரபி டாக்டர். அமெரிக்காவில் வேலை செய்தவர். அந்த வேலையை உதறிவிட்டு சினிமா ஆசையில் சென்னை வந்தவர்.

வர்மா, கார்த்தியின் சாயலில் இருப்பதால் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இதுபற்றி வர்மா கூறியதாவது:

அகத்திணை எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. படத்தை பார்த்தவர்கள், முகம் தெரியாதவர்கள்கூட கூப்பிட்டு பாராட்டிய போது சந்தோஷமாக இருந்தது.

நான் கார்த்தியின் சாயலில் இருப்பதாக சொல்கிறார்கள். கதை சொல்ல வரும் இயக்குனர்களும் அதைச் சொல்கிறார்கள். இது பிளஸ்சா, மைனசா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன்.

எந்தக் காலத்திலும் அவரை காப்பியடித்து நடிக்க மாட்டேன். அமெரிக்காவில் நடிப்பு பற்றி படித்திருக்கிறேன். இங்கும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கென தனி பாணி வைத்துக் கொண்டு தனித்தன்மையோடுதான் நடிப்பேன்.  நிறைய வாய்ப்புகள் வருகிறது.

எனக்கு தகுந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு உதவிய துணை இயக்குனர்கள் இயக்குனராகும்போது கண்டிப்பாக அவர்களுக்கு நடித்துக் கொடுப்பேன் என்கிறார் வர்மா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions