கார்த்தி படத்துக்காக மொட்டை அடித்த விவேக்

Bookmark and Share

கார்த்தி படத்துக்காக மொட்டை அடித்த விவேக்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் விவேக் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் தாடியும், அடர்ந்த முடியும் வைத்து நடித்திருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ஆங்காங்கே இவர் அடித்த கமெண்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் விவேக் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக சிவாஜி பாஸ் கெட்டப்புக்கு மாறியுள்ளார். அதாவது, மொட்டை அடித்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டுவிட்டரில் விவேக்கும், அவருடைய உதவியாளருமான செல் முருகனும் மொட்டை அடித்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும், கார்த்தி-சுராஜ் இணையும் படத்திற்காக இந்த கெட்டப் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி-சுராஜ் கூட்டணியில் ஏற்கெனவே அலெக்ஸ்பாண்டியன் படம் உருவானது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. மீண்டும் இவர்கள் இணைவது ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இழந்த வெற்றியை மீண்டும் திரும்ப பெறும் முயற்சியில் இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions