
கொம்பன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கார்த்தி ‘கஸ்மோரா’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். மேலும், விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக ‘சால்ட் அன்ட் பெப்பர்’ ஸ்டைலில் விவேக் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில், விவேக் இந்த படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடிக்கிறாராம். அதற்காகத்தான் இந்த கெட்டப் என்று விவேக்கே தெரிவித்துள்ளார். ரகசியமாக இருந்த இந்த விஷயத்தை இன்று நடந்த ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டில்தான் போட்டு உடைத்தார் விவேக்.
மேலும், கார்த்தியின் அப்பாவாக நடிப்பதற்காக விவேக்கிற்கு பல கெட்டப்புகளை போட்டுப் பார்த்துள்ளனர். எதுவும் செட்டாகவில்லையாம். கடைசியில், அப்படியே விட்டுவிடுங்கள் இன்னும் கொஞ்ச நாளைக்குள் முடி நரைத்துவிடும். அப்புறம் செட்டாகிவிடும் என்று விவேக் கூறினாராம்.
விவேக் எந்த படத்திலாவது அப்பாவாக நடிக்கிறார் என்றால், அதில் மகன் வேடத்திலும் விவேக்தான் இருப்பார். ஆனால், முதன்முதலாக ஒரு ஹீரோவுக்கு அப்பாவாக விவேக் நடிப்பது இதுதான் முதல்முறை. இந்த படத்தை ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கவிருக்கிறார்.
Post your comment
Related News | |
▪ | கார்த்தி படத்துக்காக மொட்டை அடித்த விவேக் |
![]() |