பிரபலமில்லாத ஹீரோக்களின் படங்களை தவிர்க்கும் கார்த்திக்!

Bookmark and Share

பிரபலமில்லாத ஹீரோக்களின் படங்களை தவிர்க்கும் கார்த்திக்!

ஒரு காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக திகழ்ந்தவர் நவரச நாயகன் கார்த்திக். சமீபகாலமாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகியிருக்கிறார். அதிலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார்.

அதனால், இதுவரை கார்த்திக்கை கண்டுகொள்ளாமல் இருந்த கோடம்பாக்க இயக்குனர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பி நிற்கிறது. அதனால், தினமொரு டைரக்டர்களாக அவரை சந்தித்து கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆக, இதுவரை மகன் கெளதமுக்காக கதை கேட்டு வந்த கார்த்திக், இப்போது தான் நடிப்பதற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார். பாசிட்டிவ், நெகட்டிவ் என எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க அவர் தயாராக இருப்பதால், அதிரடியான வேடங்களாக அவரை முற்றுகையிட்டுள்ளன.

ஆனால், அப்படி தன்னை தொடர்பு கொள்ளும் கதைகள் அனைத்தையும் அவர் கேட்டபோதும், அந்த படங்களில் முன்னணி ஹீரோக்கள் அல்லது டைரக்டர்கள் இருந்தால் மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறாராம் கார்த்திக்.

அது இல்லாமல் புதுமுகங்கள், பிரபலமில்லாத ஹீரோக்களின் படங்களாக இருந்தால் அதை அவர் ஓகே செய்வதில்லையாம். மேலும், இந்த விசயத்தை அவர் கதை சொல்லும்போதே அவர்களிடம் நேரடியாக சொல்வதில்லை.

மாறாக, கதையை கேட்பவர், இன்னும் இரண்டொரு நாளில் பதில் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்புபவர், பின்னர் உண்மையான காரணத்தை சொல்லாமல், நீங்கள் கேட்ட தேதியில் கால்சீட் இல்லை. எனக்கு வேறு ஒரு படம் இருக்கிறது என்று நாசுக்காக சொல்லி தவிர்த்து விடுகிறாராம் நவரசநாயகன். 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions