கார்த்திக்கின் அமரன்-2வின் நிலை

Bookmark and Share

கார்த்திக்கின் அமரன்-2வின் நிலை

கார்த்திக் நடித்த படங்களில் அமரன் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம். ஆதித்யன் இசையில் அந்த படத்தில் வெத்தல போட்ட சொக்குல என்றொரு பாடலையும் அவர் சொந்த குரலில் பாடி, பாடலும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில், சமீபகாலமாக சில சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருவதைப்பார்த்த அமரன் டைரக்டர் ராஜேஷ்வர் அப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க நினைத்தார். அதுகுறித்து கார்த்திக்கிடம் சொன்னபோது, அதிக ஆர்வத்துடன் நடிக்க தயாரானார்.

அவர் அனேகன் படத்தில் வில்லனாக நடித்தது பேசப்பட்டதால், இந்த சூட்டோடு தனது மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்று ரெடியானர். அமரன்-2 படத்தை தொடங்கயிருப்பதாக மீடியாக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சென்னை நகரமெங்கும் கார்த்திக் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்களையும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.  கார்த்திக்கின் ரீ என்ட்ரியாக தோன்றிய அமரன்-2 படத்தின் படப்பிடிப்பு இப்போதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

மேலும் அந்த படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்கவிருந்த மும்பை நடிகையும்  கொடுத்த கால்சீட் முடிந்து விட்டதால் இப்போது வேறு இந்தி படத்தில் நடிக்க சென்று விட்டார் என்று தகவல். எனவே கார்த்திக்கின் அமரன்-2 படத்தின் நிலைதான் என்னவென்று தெரியவில்லை.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions