ஹீரோவாக என்னை தக்கவைக்க தவறிவிட்டேன்: கார்த்திக்

Bookmark and Share

 ஹீரோவாக என்னை தக்கவைக்க தவறிவிட்டேன்: கார்த்திக்

15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய கே.ராஜேஷ்வர் தயாரித்து இயக்குகிறார். நாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜி.பி.கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கிரிநாத் இசை அமைக்கிறார்.

 இதுபற்றி கார்த்திக் அளித்த பேட்டி: 15 வருடத்திற்கு முன்பு நான் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நானே மீண்டும் ஹீரோவாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அமரன் என்கிற பெயருக்கு ஏற்ற மாதிரி இதனை எத்தனை பாகம் வேண்டுமானாலும் எடுக்கலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது.

அந்த மாதிரியான சப்ஜெக்ட் அது. நான் ஹீரோவாக பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் நட்புக்காக, கொஞ்சம் பணத்துக்காக கேரக்டர் ரோல், இரண்டு சீன் வருகிற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறேன். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ராவணனில் காமெடியாக நடித்தேன். அஞ்சானில் வில்லனாக நடித்தேன்.

இதை தவறு என்று சொல்ல மாட்டேன். கேரக்டர் பிடித்து நானே விரும்பித்தான் நடித்தேன். பலர் நீங்க வில்லனாக நடிக்கலாமா என்று கேட்கிறார்கள். அது அவர்கள் என் மீது கொண்டிருக்கும் நல்ல அபிப்பராயத்தால் அப்படி சொல்கிறார்கள். கண் சிமிட்டும் நேரம் படத்தில்கூட ஆன்டி ஹீரோவாகத்தான் நடித்தேன்.

ஹீரோக்கள் தங்கள் இமேஜை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். சில காரணங்களால் நான் தக்கவைக்க தவறிவிட்டேன். எனது கடிகாரம் சில வருடங்களாக சரியாக ஓடவில்லை. இப்போது அதனை ரிப்பேர் சரிசெய்து விட்டேன். இனி அது ஒழுங்காக ஓடும். என்றார் கார்த்திக்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions