கார்த்திக் படத்தில் கமல் பாட்டு!

Bookmark and Share

கார்த்திக் படத்தில் கமல் பாட்டு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் அனேகன். இந்த படத்தில் மாஜி ஹீரோ கார்த்திக் வில்லனாக நடித்து தனது செகண்ட் இன்னிங்சை அமோகமாகத் தொடங்கியிருக்கிறார்.

இதுவரை கார்த்திக்கை நெகட்டிவ் ரோல்களில் நடிக்க வைக்க தயங்கியவர்கள்கூட அனேகனைப் பார்த்து விட்டு அவரை புக் பண்ணி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கார்த்திக்கை வைத்து அமரன் படத்தை இயக்கிய ராஜேஷ்வரின் மகன் விக்ரம் இயக்கும் புதிய படத்திலும் தற்போது கார்த்திக் வில்லன் வேடத்துக்காக கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தில் ராஜேஷ்வரின் மகன்களில் ஒருவரே நாயகனாகவும் நடிக்கிறாராம். ராஜேஷ்வரின் மேற்பார்வையில் இந்த படம் நடைபெறுகிறதாம். அதோடு, ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஒரு புதியவர் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

அவரது இசையில் அமரன் படத்தில் வெத்தல போட்ட சோக்குல -என்ற பாடலை பாடிய கார்த்திக், மீண்டும் அதே பாணியில் ஒரு கானா டைப் பாடலை பாடுகிறாராம். அவர் மட்டுமின்றி, உலக நாயகன் கமலையும் ஒரு பாட்டு பாட வைக்க பேசியிருக்கிறார்கள்.

அவரும் ஓகே சொல்லி விட்டாராம். இதையடுத்து அந்த படத்தில் நடிப்பதற்கு ஹன்சிகா போன்ற முன்னணி ஹீரோயினிகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions