யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது - கார்த்திக் ராஜா!

Bookmark and Share

யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது - கார்த்திக் ராஜா!

இளையராஜாவின் இரண்டாவது மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நேற்று ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 3வது திருமணம் நடந்தது. ஜபருன்னிசா என்ற முஸ்லிம் பெண்ணை தான் யுவன் தற்போது மணந்துள்ளார். இந்த திருமணத்தில் யுவனின் அப்பாவான இளையராஜாவோ மற்றும் அவர்கள் குடும்பத்தார் யாரும் பங்கேற்கவில்லை, யுவனின் சகோதரி பவதாரிணி மட்டும் அவரது கணவரோடு இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

மிகவும் ரகசியமாக இந்த திருமணம் நடந்துள்ளது. மேலும் ஏற்கனவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வரும் யுவன், தனது பெயரை அப்துல் ஹாலிக் என்று மாற்றியுள்ளார்.  

இந்நிலையில் யுவனின் திருமணம் செய்தி நேற்று இரடு கோடம்பாக்கம் முழுக்க காட்டுத்தீயாய் பரவியது. இதுப்பற்றி சரியான தகவல் தெரியாதபடி பத்திரிகையாளர் பலரும் இளையராஜா குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முயற்சித்தினர். ஆனாலும் யாரிடமிருந்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நாம் இளையராஜாவின் மூத்தமகன் கார்த்திக் ராஜாவை இன்று அதிகாலை தொடர்புகொண்டு இந்த திருமணம் பற்றிய செய்தி உங்களுக்கு தெரியுமா, அவரது சகோதரர் என்ற முறையில் நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டோம்.

அதற்கு அவர் சொன்ன பதிலை அப்படியே தருகிறோம்.... ஒவ்வொரு புத்தாண்டு அன்று நாங்கள் வழக்கமாக திருவண்ணாமலை செல்வது வழக்கம். அதேப்போல் இந்த வருடமும் நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை சென்றுவிட்டோம்.

யுவனின் திருமணம் செய்தி எங்கள் யாருக்கும் தெரியாது என்றார். சரி, உங்கள் சகோதரி பவதாரணி அவரது கணவருடன் திருமணத்தில் கலந்து கொண்டாரே அதுப்பற்றி...? அதுவும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் நேற்று இரவு தான் சென்னை திரும்பினோம். அவர் யுவனின் திருமணத்திற்கு செல்வதாக எங்கள் யாரிடமும் சொல்லவில்லை.

சென்னைக்கு நேற்று இரவு தான் திரும்பினோம். என் குழந்தைகள் மற்றும் பெரியப்பா குடும்பத்தாருடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். மீண்டும் வீடு திரும்பினோம்.

இதுதான் நடந்தது. திருமணத்திற்கு செல்லாதது எனக்கும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. யுவன் சென்னை திரும்பியதும் குடும்பத்தினருடன் கலந்து பேசி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.  

இவ்வாறு கார்த்திக் ராஜா தெரிவித்தார். 


Post your comment





Related News
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions