இளையராஜாவுக்காக மீண்டும் பிரம்மாண்ட இசை கச்சேரி நடத்தும் கார்த்திக் ராஜா

Bookmark and Share

இளையராஜாவுக்காக மீண்டும் பிரம்மாண்ட இசை கச்சேரி நடத்தும் கார்த்திக் ராஜா

இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

தனது அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த வருடம் மதுரையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரிலும் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் ராஜா கூறும்போது, மதுரையில் கடந்த வருடம் நடந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிறைய பேர் கோயமுத்தூரிலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். தற்போது இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்த இசை நிகழ்ச்சியில் நல்ல திறமையான பாடகர்களை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கார்த்திக் ராஜா இசையில், ‘கடை எண் 6’, ‘வாராயோ வெண்ணிலவே’, ‘சகாப்தம்’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் சகாப்தம் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions