இறைவி கதை விவாதத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

Bookmark and Share

இறைவி கதை விவாதத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

விஜயசேதுபதி நடித்த பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். ஒரு பீட்சா கடை, ஒரு வீடு என இரண்டு விதமாக லொகேசன்களில் ஒரு முழு படத்தையும் இயக்கினார்.

அதோடு, அவர் அமைத்திருந்த விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும், கதையை சொன்ன விதமும் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருந்ததால் அப்படத்துக்கு பெரிய வரவேற்பினை கொடுத்தனர்.

அதேபோல், தனது இரண்டாவது படமான ஜிகர்தண்டாவையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் படமாக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது அடுத்த படமான இறைவி வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இந்த படத்தில் தனது ஜிகர்தண்டாவில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவையே ஹீரோவாக்கியிருக்கிறார் அவர். மேலும், தன்னை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதால் முதல் இரண்டு படங்களையும் விட இந்த மூன்றாவது படமான இறைவியை இன்னும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கப்போகிறாராம்.

அதோடு, அவர் படத்திற்கு முன்பே பாபி சிம்ஹா சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவர் கால்சீட் தருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து ஸ்கிரிப்ட் வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions