தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு: ஜிகர்தண்டா மொழிமாற்று உரிமத்தை விற்க ஐகோர்ட் தடை

Bookmark and Share

தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு: ஜிகர்தண்டா மொழிமாற்று உரிமத்தை விற்க ஐகோர்ட் தடை

ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் விற்பதாக அவர் மீது கார்த்திக் சுப்புராஜ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், படத்தின் இந்தி உரிமையை விற்க தடை விதித்துள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை தன்னை கேட்காமல் விற்க முயற்சி நடப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

தற்போது இந்த பிரச்சனை காரணமாக கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன், எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இந்த பிரச்னையை பதிவு செய்தேன். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்சனையை நாலு சுவற்றுக்குள் முடிக்கலாம் என கூற, பல முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் எஸ்.கதிரேசன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் போகவே சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கவில்லை. 

எனவே இயக்குனர் சங்கத்தின் ஆலோசனையோடு வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம் இப்போது படத்தின் மொழி மாற்று உரிமத்தை விற்பதற்கு ஜூன் 11-ம் தேதி வரை தடை விதித்துள்ளது.

தயாரிப்பாளருக்கும் இத்தடை உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தரப்பு பதிலையும் நீதிபதி கோரியுள்ளார்.

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions