ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

Bookmark and Share

ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். அதேபோல் ரஜினியின் ‘2.0’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 

இந்நிலையில், ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் நாயகிகளாக திரிஷா மற்றும் அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்த தகவல் குறித்து கார்த்திக் சுப்புராஜிடம் கேட்ட போது, அவர் அதனை மறுத்தார். திரிஷா மற்றும் அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், நாயகி தேர்வு நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

படப்பிடிப்பை அடுத்த மாதம் துவக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா?
அவரோடு ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை! எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions