லண்டனில் பட்டம் வாங்கிய கார்த்திகா

Bookmark and Share

லண்டனில் பட்டம் வாங்கிய கார்த்திகா

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கிய ராதாவின் மூத்த மகளான கார்த்திகா 'கோ' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.

அறிமுகப்படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த கார்த்திகா, அடுத்து அவருடைய அம்மாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா இயக்கத்தில் 'அன்னக்கொடி' படத்தில் நாயகியாக நடித்தார்.

அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'புறம்போக்கு' படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இதற்கிடையில் யுனிவர்சிட்டி ஆப் லண்டனில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார் கார்த்திகா. சமீபத்தில் அங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அம்மா ராதாவுடன் சென்று பட்டத்தை இங்கிலாந்து இளவரசி கையால் பெற்றிருக்கிறார்.

பள்ளி மாணவியாக இருந்த போதே தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அவருடைய தங்கை துளசியும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் 'கடல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமனார்.

அப்படத்தின் தோல்விக்குப் பிறகு அவர் நடித்த இரண்டாவது படமான 'யான்' படமும் தோல்வியடைந்தது. 'புறம்போக்கு' படம் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்று கார்த்திகா நம்பிக்கை வைத்துள்ளார். 'பட்டம்' கிடைச்சாச்சி 'படம்' கிடைக்காமலா போய்விடும்.


Post your comment





Related News
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
கார்த்தியின் கஷ்மோரா பட பெயர் வர காரணம் வெளியானது!
எங்கே ராதாவின் மகள்கள்?
கவலையில் கார்த்திகா-துளசி நாயர் சகோதரிகள்!
கார்த்திகாவின் பாலிசி!
ஜோடி சீசன் 8-ல் கார்த்திகா நாயர்!
பணத்துக்காக நடிக்கவில்லை: கார்த்திகா
முதல் தற்கொலை படை தலைவி குயிலியாக கார்த்திகா!
இயக்குனருக்கு நன்றி சொல்லும் கார்த்திகா!
பாரதிராஜாவுடன் நடிப்பது பாக்கியம் - கார்த்திகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions