ஆசைப்பட்டார் கார்த்திகா; அசையவில்லை பாரதிராஜா!

Bookmark and Share

ஆசைப்பட்டார் கார்த்திகா; அசையவில்லை பாரதிராஜா!

அம்மா ராதா நடித்ததில் கார்த்திகா நாயருக்கு மிகவும் பிடித்த படங்கள் ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘முதல் மரியாதை’. இந்த மூன்றையும் இயக்கியவர், ராதாவை அறிமுகம் செய்த பாரதிராஜா.

மூன்று படங்களில் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்ய முன்வந்தால், அதில் ராதா நடித்திருந்த கேரக்டரில் நடிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார் கார்த்திகா. இதைக் கேள்விப்பட்ட பாரதிராஜா, ‘அந்த மூன்று படங்களும் கிளாசிக் ரகத்தைச் சேர்ந்தவை. அதை ரீமேக் செய்யும் எண்ணம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஸோ, கார்த்திகாவின் ஆசை நிராசையாகி விட்டது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions