இயக்குனருக்கு நன்றி சொல்லும் கார்த்திகா!

Bookmark and Share

இயக்குனருக்கு நன்றி சொல்லும் கார்த்திகா!

கோ பட நாயகியான கார்த்திகாவும், அவரது சகோதரியான கடல் படநாயகி துளசியும், அவர்களது தாயார்  ராதா, பெரியம்மா அம்பிகா போன்று சினிமா உலகை ஒரு கலக்கு கலக்குவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப அவர்களது என்ட்ரியும் கலக்கலாகத்தான் இருந்தது. கார்த்திகா கே.வி.ஆனந்த் இயக்கத்திலும், பின்னர் பாரதிராஜா இயக்கத்திலும் நடித்தார். அதேபோல் துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார்.

இருப்பினும், அடுத்தடுத்து அவர்களுக்கு சரியானபடி படங்கள் இல்லை. யான் படத்திற்கு பிறகு துளசி நாயரை காணவில்லை. இந்த நிலையில், கார்த்திகா மட்டும் தாக்குப்பிடித்துக்கொண்டு நிற்கிறார்.

எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தபடம் வந்தால், வழக்கமான நடிகைகளில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான நடிகையாக அவர் இடம்பிடிப்பார் என்கிறார்கள்.

அதோடு, புறம்போக்கு படத்தின் இயக்குனர் ஜனநாதன், இந்த படத்திற்கு கார்த்திகாவை புக் பண்ணியபோது பயந்தேன். ஆனால் நான் கேரக்டர் பற்றி சொன்னதும் அதை உள்வாங்கிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே களத்தில் நின்றார்.

அதன்பிறகே எனக்கு அவர் மீது நம்பிக்கை வந்தது. அதை அவர் நூறு சதவிகிதம் காப்பாற்றி விட்டார் என்று கார்த்திகாவின் நடிப்பு குறித்து தான் செல்லும் இடங்களில் எல்லாம் பெருமையாக பேசி வருகிறார்.

இதனால் மனதளவில் பூரித்துப்போய் இருக்கிறார் கார்த்திகா. அதோடு, தன்னை எங்காவது ஜனநாதன் புகழ்ந்து பேசியிருக்கிறார் என்கிற சேதியை கேள்விப்பட்டால், உடனே அவருக்கு போன் செய்து நன்றி சொல்வதையும் தவறாமல் கடைபிடித்து வருகிறாராம் கார்த்திகா.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions