முதல் தற்கொலை படை தலைவி குயிலியாக கார்த்திகா!

Bookmark and Share

முதல் தற்கொலை படை தலைவி குயிலியாக கார்த்திகா!

புறம்போக்கு படத்தில் குயிலி என்றொரு போராளி வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்திகா. இந்த கேரக்டரில் நடிக்கிறபோது கார்த்திகாவின் முகத்தில் அழகு தெரியக்கூடாது என்பதற்காக அவரை டல் மேக்கப் போட்டே நடிக்க வைத்துள்ளனர்.

அப்படியிருந்தும் சில சமயங்களில் கேமரா முன்பு வந்ததும் அழகாக தெரிய அவரது முகத்தை மேலும் டல் பண்ணி நடிக்க வைத்துள்ளனர். அதோடு, முதன்முறையாக இந்த படத்தில் ஆக்சன் ரோலில் நடித்திருந்தாலும், கார்த்திகா கால் தூக்கி சண்டை செய்த விதம் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக இருந்ததாம்.

அந்த அளவுக்கு வித்தியாசமான பர்பார்மென்ஸ் கொடுத்திருக்கிறாராம். மேலும், புறம்போக்குவில் போராளியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு குயிலி என்று பெயர் வைத்து ஏன்? என்பது பற்றி டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் கூறுகையில், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு எதிரான ஒரு தற்கொலைப்படை தோன்றியது.

அதன் தலைவியாக இருந்தவர் குயிலிதான். அதனால்தான் அவர் பெயரை கார்த்திகாவின் கேரக்டருக்கு வைத்தேன் என்றார். இதுபற்றி கார்த்திகா கூறுகையில், குயிலி வேடத்தில் நான் நடிக்கும்போது ஆர்யா எனக்கு நிறைய சப்போட்டாக இருந்தார். என்கரேஜ் செய்தார். அவர் மட்டுமின்றி, ஐந்து தோழர்களும் என்னுடன் நடித்தனர்.

அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். இதற்கெல்லாம் மேலாக, டைரக்டர் ஜனநாதன், எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். தன்னை விட சிறியவர்களாக இருந்தாலும் மரியாதை கொடுத்தார்.

அந்த வகையில் அவர் வேலை வாங்கிய விதமே வித்தியாசமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையுமே அவர் தோழராகவே பார்த்தார். மேலும், அவர் பழகிய விதம், இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுவதாகவே இருந்தது. அந்த வகையில் எனக்குள் இருந்த ஒரு ஆக்சன் ஹீரோயினியை வெளியே கொண்டு வந்து விட்டார் ஜனநாதன் என்கிறார் கார்த்திகா.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions