கார்த்திகாவின் பேச்சுவார்த்தை!

Bookmark and Share

கார்த்திகாவின் பேச்சுவார்த்தை!

தமிழில் ஜீவாவுடன் கோ படத்தில் நடித்த கார்த்திகா, அதைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதன்பிறகு அருண் விஜய்யுடன் வா டீல் மற்றும் எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில், முன்பே அவர் நடித்த வா டீல் படம் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு அருண்விஜயின் மார்க்கெட் ஓரளவு சூடு பிடித்திருப்பதால் தற்போது வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.

அதையடுத்து புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜயசேதுபதி, ஷாம் என பல ஹீரோக்கள் இருந்தபோதும் கார்த்திகாவும் ஒரு ஆக்சன் ரோலில் நடித்திருக்கிறார். அதனால், அடுத்தபடியாக இந்த படங்கள் வெளியான பிறகுதான் புதிய படங்களில் கமிட்டாவது என்ற முடிவில் இருக்கிறார் கார்த்திகா.

இருப்பினும், சில வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் அவரை நடிக்க வைப்பதற்காக கால்சீட் கேட்டு துரத்துகிறார்களாம். ஆனால் இதுவரை எந்த புதிய படத்திற்கும் பிடிகொடுக்காத கார்த்திகா, ஒன்று பெரிய ஹீரோ படமாக இருக்க வேண்டும்.

இல்லை சிறிய ஹீரோ படமாக இருந்தால் கதையில் எனக்கு பெரும்பங்கு இருக்க வேண்டும் என்ற கண்டிசனை முன்வைத்து பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கயிருக்கிறாராம்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions