கவலையில் கார்த்திகா-துளசி நாயர் சகோதரிகள்!

Bookmark and Share

கவலையில் கார்த்திகா-துளசி நாயர் சகோதரிகள்!

மணிரத்னத்தின் பெருமைக்குரிய அறிமுகம் என்று கடல் படத்தில் நடித்தவர் மாஜி ஹீரோயின் ராதாவின் இளைய மகள் துளசி நாயர்.

ஆனால், அந்த படம் தோல்வியடைந்தது. பின்னர் ரவி கே.சந்திரனின் யான் படத்தில் நடித்தார் அவர். அந்தபடமும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது படமே இல்லாமல் இருக்கிறார் அவர்.

இந்தநிலையில், கோ என்ற வெற்றிப் படத்தில் நடித்த அவரது அக்கா கார்த்திகா நாயர், பின்னர் பாரதிராஜாவின் அன்னக்கொடி மற்றும் எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அந்த இரண்டு படங்களுமே கார்த்திகாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன.

குறிப்பாக, புறம்போக்கு படத்தில் அவர் உயிரை கொடுத்து நடித்ததாக அப்படத்தின் டைரக்டர் ஜனநாதனே சில மேடைகளில் கார்த்திகா புகழ் பாடினர். அது உண்மையு கூட. ஆனால் அப்படி நடித்தபோதும் கார்த்திகாவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் அக்கா - தங்கை இருவரும் கவலையில் இருக்கிறார்கள்.  

அதேசமயம் சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லையென்றால், அடுத்து ஹோட்டல் பிஸ்னசிலேயே முழுநேரத்தையும் செலவிடலாமா? என்றும் யோசித்து கொண்டிருக்கிறாராம் கார்த்திகா.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions