உங்களை நம்பி ஒரு போராட்டம் கூட அறிவிக்க முடியலையேடா...கரு.பழநியப்பன்

Bookmark and Share

உங்களை நம்பி ஒரு போராட்டம் கூட அறிவிக்க முடியலையேடா...கரு.பழநியப்பன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட முழு திரையுலகமும் களத்தில் இறங்கி போராடி வரும் நிலையில் சற்று முன் பிரபல இயக்குனர் கரு.பழநியப்பன் இதுகுறித்து தனது ஆவேசமான கருத்துக்களை தொலைக்காட்சி வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தினத்தில் மாட்டை கொடுமைப்படுத்துவதாகவும், மாட்டுக்கு சாராயம் கொடுப்பதாகவும், அதன்மேல் மிளகாய்ப்பொடியை தூவுவதாகவும் பீட்டா சொல்கிறது. பீட்டா சொல்வது ஒருவேளை உண்மை என்றே வைத்து கொள்வோம். அந்த ஒருநாள் தவிர மீதி 364 நாட்கள் அதே மாடுகளை தனது பிள்ளைகள் போல் பாதுகாப்பது யார்? பீட்டாவா? அந்த மாட்டை வளர்ப்பவனா?

பொதுவாக ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனித்த அடையாளங்களை அழிக்க முயற்சிப்பார்கள். தமிழ்நாட்டில் பொங்கல், கேரளாவில் ஓணம் ஆகிய தனித்த அடையாளங்களை அழித்துவிட்டு நாடு முழுவதும் பொதுவான பண்டிகையான தீபாவளி, ஹோலி ஆகிய பண்டிகையை மட்டும் கொண்டாட வேண்டும் ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

காலையில் ஒரு அறிவிப்பு, பின்னர் மாலையில் அந்த அறிவிப்பு வாபஸ் என்று கூறுகின்றனர்.  காலையில் பொங்கல் விடுமுறை இல்லை என்கிறார்கள், போராட்டம் அறிவித்தவுடன் விடுமுறை உண்டு என்கிறார்கள், காலையில் சேவை வரி உண்டு என்கிறார்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் சேவை வரி இல்லை என்கிறார்கள். இவர்களை நம்பி ஒரு போராட்டம் கூட அறிவிக்க முடியவில்லையேடா. இவ்வாறு இயக்குனர் கரு.பழநியப்பன் ஆவேசமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
படத்துல நடிக்காம ஸ்டேஜ்ல நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.. போட்டுத்தாக்கும் கரு பழனியப்பன்
சிவகார்த்திகேயன் செய்வது ட்ராமா- வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு
தொகுதிக்குள் சென்ற நடிகர் கருணாஸ்- பின் என்ன நடந்தது தெரியுமா?
கருணாஸ் மனைவிக்கு மாரடைப்பு வரவைத்த ஒரேஒரு புகைப்படம்
சமூக வலைதளங்களில் அவதூறு.. சி.ஆர்.சரஸ்வதியை தொடர்ந்து கமிஷனர் ஆபீஸில் நடிகர் கருணாஸ் புகார்
என்னை கேள்வி கேட்க உரிமையில்லை.. வாக்காளர்களைப் பார்த்து கருணாஸ் எகத்தாளப் பேச்சு
பிறந்தநாளுக்கு கூட இப்படியா? கருணாஸ் உச்சக்கட்ட வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions