கள்ளன் படத்தில் முறுக்கு மீசையுடன் கரு.பழனியப்பன்!

Bookmark and Share

கள்ளன் படத்தில் முறுக்கு மீசையுடன் கரு.பழனியப்பன்!

பார்த்திபன் கனவு’, ‘சதுரங்கம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் ‘மந்திர புன்னகை’ படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படத்தை இவர் இயக்கியும் இருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது ‘கள்ளன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் சந்த்ரா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கம்பம் பகுதிகளில் 45 நாட்கள் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தில் கரு.பழனியப்பன் அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என கிராமத்து கெட்டப்பில் கம்பீரமாக நடிக்கிறாராம். இப்படம் விவசாயிகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டையாடிகளின் கதையாம். வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றிய கதையாக உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு கரு.பழனியப்பன் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். பின்னர் ‘கிராமபோஃன் என்ற படத்தையும் இவரே இயக்கி நடிக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions