கருடாவில் 3 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் விக்ரம்!

Bookmark and Share

கருடாவில் 3 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் விக்ரம்!

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார்.

இவர் இயக்குனரும் ஆவார். இவருடன் நாசர், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரு இயக்குகிறார். படத்துக்கு படம் கெட்டப்பை மாற்றி நடிக்கும் விக்ரம் இந்த படத்திலும் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. இப்படம் பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions