விக்ரம் நடிப்பில் உருவாகும் கருடா படத்தின் முதல் பாடல் ரெடி!

Bookmark and Share

விக்ரம் நடிப்பில் உருவாகும் கருடா படத்தின் முதல் பாடல் ரெடி!

விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்திற்கு பிறகு விக்ரம், ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘கருடா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது படக்குழுவினர் படத்திற்கான பாடல் உருவாக்குவதில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

முதல்கட்டமாக படத்திற்கான முதல் பாடல் இசையை முடித்து விட்டார்கள். ரெக்கார்டிங் ஒர்க்கை நாளை தொடங்க இருப்பதாக இயக்குனர் திரு கூறியிருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் கிரிநந்த் வேலையை பார்த்து வியந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions