3 வருடத்தில் 25 படங்கள்: ரசிகர்களுக்கு கருணாகரன் நன்றி

Bookmark and Share

3 வருடத்தில் 25 படங்கள்: ரசிகர்களுக்கு கருணாகரன் நன்றி

வடிவேலு அரசியலுக்குள் நுழைந்த சைக்கிள் கேப்பில் சினிமாவிற்குள் புதிய அலையாய் பல காமெடியன்கள் வந்தார்கள். பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், மூடர்கூடம் போன்ற படங்கள் புதிய காமெடியன்களை கொடுத்தது.

இவர்களில் 3 வருடத்தில் 25 படங்களில் நடித்ததோடு ரஜினியுடன் நடித்து அந்த உயரத்தையும் தொட்டவர் கருணாகரன்.

25 படங்களை நெருங்கிவிட்ட சந்தோஷத்தில் ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது.

முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தார்.

வரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். 25வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர்.

எனக்கும், ரசிகர்களுக்கும் மன நிறைவான கதாபாத்திரங்கள் அவை. என்னை செதுக்கிய இவர்களுக்கும், எனது சினிமா பாதையில் ஊன்றுகோலாக எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் இத்தருணத்தில மனதார  நன்றி தெரிவிக்கிறேன்.

லிங்கா படத்தில் எனக்கு நடிக்க வாய்பளித்த கே.எஸ். ரவிகுமாருக்கும், ரஜினி சாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்த மூன்று வருடங்களில் நான் நடித்த படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடனும் வித்தியாசமாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முதன்மை காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எனது 25வது படத்தை நெருங்கும் இந்த நேரத்தில் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நிறைகளை பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் என்னை வளர்த்ததற்கு நன்றி. படங்களில் எனது நடிப்பை பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கருணாகரன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions