எமியை காப்பாற்றி கடமையைச் செய்த கருணாகரன்!?

Bookmark and Share

எமியை காப்பாற்றி கடமையைச் செய்த கருணாகரன்!?

உதயநிதி, நயன்தாரா சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் 'நண்பேன்டா' படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நண்பேன்டா படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே, தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கிவிட்டார் உதயநிதி.

'மான் கராத்தே' பட இயக்குநர் திருக்குமரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக, எமி ஜாக்ஸன் நடிக்கிறார். சந்தானத்துடன் உரசல் ஏற்பட்டதால் அவர் இப்படத்தில் இல்லை.

காமெடியனாக கருணாகரன் நடிக்கிறார். உதயநிதி உடன் எமிஜாக்சன், கருணாகரன் பங்குபெற்ற இப்படத்திற்கான முதல் ஷெட்யூல் கேரளாவில் நடைபெற்றது. பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கிய இந்த முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக நடிகை எமி ஜாக்ஸன் தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

அதோடு கேரள மலையில், செங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது நடிகை எமி ஜாக்ஸன் தடுமாறிவிழ, பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த நடிகர் கருணா அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றி இருக்கிறார்.  

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு கருணாவுக்கு ட்வீட் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார் எமி.  நேற்று எமி ஜாக்ஸனை காப்பாற்றினார் கருணா. உண்மையான ஹீரோ. 'நான் என் கடமையைத்தானே செஞ்சேன்' என வேடிக்கையாக ட்வீட் செய்திருக்கிறார் உதயநிதி.


Post your comment





Related News
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions