காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி

Bookmark and Share

காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், காந்தி ஜெயந்தி ஒரு மாநிலத்திற்கு மட்டும் தானா? என பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!
விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்: கருணாகரன்
விஷால் சொன்னார்; கருணாகரன் செய்தே காட்டிவிட்டார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions