தனுஷுடன் காமெடி செய்யும் கருணாகரன்

Bookmark and Share

தனுஷுடன் காமெடி செய்யும் கருணாகரன்

தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை வருகிற ஜுலை 17-ந் தேதி வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு தனுஷ், பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். 

இந்நிலையில், இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க கருணாகரன் தேர்வாகியிருக்கிறார். தனுஷுடன், கருணாகரன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படம் முழுக்க முழுக்க ரெயிலேயே படமாக்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவுள்ளார் பிரபு சாலமன். இப்படத்தில் தனுஷ் சமையல்காரனாக நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions