காணாமல் போன தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்!

Bookmark and Share

காணாமல் போன தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்!

ஒரு திரைப்பட கலைஞனுக்கு சம்பளத்தை விட கைதட்டலும், அங்கீகாரமும்தான் முக்கியம் என்பார்கள். அதற்காகத்தான் மத்திய அரசு, மாநில அரசு, சில தனியார் அமைப்புகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆண்டு தோறும் நந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தன் கலைஞர்களை ஆண்டு தோறும் கவுரவித்து வருகிறது. கேரள அரசு திரைப்பட கலைஞர்களை கொண்டாடுகிறது.

முக்கிய நட்சத்திரங்கள் மறைந்தால் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது. உலக திரைப்பட விழாக்கள், திரைப்பட கருத்தரங்குகளை நடத்துகிறது. அரசாங்கமே முக்கிய நகரங்களில் தியேட்டர் நடத்துகிறது.

ஆனால் சினிமாத் துறையை சேர்ந்த 5 பேர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தும் திரைப்படத்துறை கண்டு கொள்ளப்படாமல் இருப்பது தமிழ்நாட்டில்தான். 1967ம் ஆண்டு திரைப்பட விருது வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் விருது வழங்கப்படவில்லை. சில ஆண்டுகள் வழங்குவதும், சில பல ஆண்டுகள் வழங்காமல் இருப்பதுமான திரைப்பட விருதுகள் ஒரு அரசியல் விளையாட்டாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடைசியாக 2008ம் ஆண்டு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு 2009ம் ஆண்டில் அது வழங்கப்பட்டது. அதன் பிறகு 2014 வரை கடந்த 6  வருடங்களாக தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படவில்லை.

இத்தனைக்கும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, ஸ்டாலின், சரத்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்ட சினிமா தொடர்புடையவர்கள் சட்டமன்றதிலே இருக்கிறார்கள். மற்ற கோரிக்கைகள் என்றால் திரைப்பட உலகம் கேட்கமுடியும்.

எங்களுக்கு விருது கொடுங்கள் என்று எப்படி கேட்க முடியும். கடந்த 7 வருடமாக தமிழக அரசு விருதுகள் வழங்கப்படவில்லை. இனி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை.

எனவே தான் தனியார் சேனல்களும், தனியார் அமைப்புகளும் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி அதை படம்பிடித்து நிகழ்ச்சியாக்கி அதையும் வியாபாரம் செய்கிறார்கள். அரசு கைவிடும் விஷயங்களை தனியார்கள் எடுத்துக் கொள்வது மரபுதானே. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions