உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சோவை சந்தித்து நலம் விசாரித்தார், கருணாநிதி

Bookmark and Share

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சோவை சந்தித்து நலம் விசாரித்தார், கருணாநிதி

முதுபெரும் நடிகரும், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ‘சோ’ ராமசாமி(80) மூச்சுத்திணறல் சார்ந்த உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல் அமைச்சருமான கருணாநிதி, அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ‘சோ’வை சந்தித்து நலம் விசாரித்தார். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து, பின்னர் விடைபெற்று சென்றார்.

கருணாநிதியுடன் அவரது மனைவி ராஜாத்தி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் தமிழக அமைச்சர்கள் ஏ.வ. வேலு, துரைமுருகன் ஆகியோர் உடன் வந்தனர். தைராய்டு தொடர்பான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகள் கனிமொழியை பார்ப்பதற்காக இங்கு வந்தபோது கருணாநிதி-‘சோ’ ராமசாமி இடையிலான இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

பத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்ததுடன், திரைப்பட நடிகராகவும் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ‘சோ’ ராமசாமி, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்டவர். தனது நகைச்சுவை கதாபாத்திரங்களின் மூலமாக இவர் அள்ளித்தெறித்த அரசியல் நையாண்டி கட்சி, பேதங்களை மறந்து அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.

‘முகமது பின் துக்ளக்’ உள்பட 5 திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகிக்கும் ‘சோ’ ராமசாமி, இந்து மதத்தின் பழம்தொன்மை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சில நூல்களையும் இயற்றியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions