கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி

Bookmark and Share

கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். மாலையில் நடிகர் அஜித் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அதுபோல் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் நேரில் சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

 


Post your comment





Related News
காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்? என்ன நடந்தது?
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்
உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions