குட்டி பத்மினி இயக்கும் ராமானுஜர் - கருணாநிதி வசனம் எழுதுகிறார்

Bookmark and Share

குட்டி பத்மினி இயக்கும் ராமானுஜர் - கருணாநிதி வசனம் எழுதுகிறார்

நடிகை குட்டிபத்மினி தற்போது 63 நாயன்மார்கள் தொடரை தயாரித்து ஒளிபரப்பி வருகிறார். அது நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அடுத்து ராமானுஜர் என்ற ஆன்மீக தொடரை இயக்க இருக்கிறார்.

இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தி.மு.கழக தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். குட்டி பத்மினியின் வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சீரியல் இயக்குனராக குட்டி பத்மினி பணியாற்றுகிறார். ஆர்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார். இதுபற்றி குட்டி பத்மினி கூறியதாவது: வைணவ தர்மத்தை பாமர மக்களுக்கு எடுத்துரைத்த மகத்தான மகான் ராமானுஜர், திராவிட தமிழ் வேதமான திவ்யபிரபந்தத்தை மக்களின் மனதில் ஆழப் பதியச் செய்து மதத்தில் பல புரட்சிகளை செய்த மாசற்ற மகான் ராமானுஜர், அவர் பிறந்து ஆயிரமாண்டுகளாகும் இந்த நேரத்தில் இந்த தொடரை ஒளிபரப்புவதில் பெருமை கொள்கிறோம்.

ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக படம் பிடித்து நெடுந் தொடராக நேயர்களுக்கு வழங்க இருக்கிறோம். கருணாநிதியின் கைவண்ணத்தில் இது உருவாவது இன்னும் சிறப்பு என்கிறார் குட்டி பத்மினி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions