கருணாநிதி கொண்டு வந்ததிலேயே இந்த திட்டம் தான் விஜய்க்கு மிகவும் பிடித்ததாம், அவரே சொல்கிறார்

Bookmark and Share

கருணாநிதி கொண்டு வந்ததிலேயே இந்த திட்டம் தான் விஜய்க்கு மிகவும் பிடித்ததாம், அவரே சொல்கிறார்

விஜய் இன்று தமிழ் சினிமாவை ஆளும் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் ஆரம்ப காலத்தில் திமுக-விற்கு ஆதரவாகவே பல இடங்களில் தன்னை காட்டிக்கொண்டார். இந்த நிலையில் விஜய் சில வருடங்களுக்கு முன் தனக்கு கலைஞர் கொண்டு வந்ததிலேயே இந்த திட்டம் தான் மிகவும் பிடித்தது என கூறியுள்ளார்.

அது வேறு ஒன்றுமில்லை, 108 ஆம்புலன்ஸ் திட்டம் தானாம், இதை ஒரு நிகழ்வு மூலம் விஜய் கூறியுள்ளார். அது என்னவென்றால் வேலூர் வழியில் ஒரு குடும்பம் காரில் சென்ற போது, பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டதாம்.

அப்போது அந்த அம்மா என் புருஷனை காப்பாற்று உனக்கு 108 பால்குடம் தூக்குகிறேன் என்று கத்த, அங்கிருந்த பெரியவர் ஒருவர் 108க்கு போன் செய்யுங்கள் என்றாராம். அவரும் அதை செய்ய உடனே ஆம்புலன்ஸ் வந்து அவருடைய கணவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதை விஜய் நினைவு கூர்ந்து கலைஞரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions