அருள்நிதி திருமணம் - கருணாநிதி நடத்தி வைத்தார்!

Bookmark and Share

அருள்நிதி திருமணம் - கருணாநிதி நடத்தி வைத்தார்!

திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதியின் திருமணத்தை, கருணாநிதி இன்று(08.06.15) நடத்தி வைத்தார். கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமான அருள்நிதி, மெளன குரு படத்தின் மூலம் அனைவரையும் கவர்நதார்.

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தகராறு போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியான டிமான்ட்டி காலனி எனும் திகில் படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அருள்நிதிக்கும், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனையடுத்து இவர்களது திருமணம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று நடந்தது. திமுக., தலைவர் கருணாநிதி இந்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.  

இந்த திருமணத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆளுநர் ரோசைய்யா, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தேமுதிக., சுதீஷ், ஜி.கே.வாசன், ஞானதேசிகன், வைகோ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பில் நடிகர் ரஜினிகாந்த், இயக்கநர் பாண்டிராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions