காமெடி கிங் பட்டம் யாருக்கு?

Bookmark and Share

காமெடி கிங் பட்டம் யாருக்கு?

சில வருடங்களுக்கு முன் வரை காமெடியனாக பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் கருணாஸ். காமெடியனான அவர் தன்னைப் பற்றிய மிகையான கனவில் படத்தயாரிப்பு, பட விநியோகம் ஹீரோவாக நடிப்பது என அகலக்கால் வைத்தார். அதுவே அவருக்கு ஆபத்தாக மாறியத. கருணாஸின் மார்க்கெட்டையும் காலி பண்ணியது.

மார்க்கெட் போனதால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த கருணாஸுக்கு சில மாதங்களுக்கு முன் வெளியான டார்லிங் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்து கொம்பன் படத்திலும் இடம் பிடித்தார் கருணாஸ்.

கொம்பன் படத்தில் காமெடியனாக நடித்திருப்பது தம்பிராமையாதான். கருணாஸுக்கு குணசித்திர வேடம். நடிப்பது குணசித்திர வேடம் என்றாலும் கொம்பன் படத்தின் டைட்டில் கார்டில் காமெடி கிங் கருணாஸ் என்று போட்டுள்ளனர்.

கடந்த வாரம் வெளியான நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் சின்னத்திரையில் பிரபலமான அசத்தப்போவது யாரு புகழ் மதுரை முத்து நடித்திருக்கிறார். அவருக்கும் காமெடி கிங் பட்டம் கொடுத்துள்ளனர் அவரது ரசிகர்கள். மொத்தத்தில், காமெடி கிங் பட்டம் யாருக்கு...?!


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions