ஹீரோக்களை சரமாரியாக புகழ்ந்து தள்ளும் கருணாஸ்!

Bookmark and Share

ஹீரோக்களை சரமாரியாக புகழ்ந்து தள்ளும் கருணாஸ்!

நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமானவர் கருணாஸ். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர், திடீரென்று அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா உள்பட சில படங்களில் ஹீரோ அரிதாரம் பூசினார்.

அதோடு, நல்ல கதைகளாக கிடைத்தால் ஒரே நேரத்தில் பத்து படங்களில்கூட நான் ஹீரோவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் அந்த நேரத்தில் தில்லாக பேசி வந்தார்.

ஆனால், அப்படி அதிக நம்பிக்கையுடன் கருணாஸ் நடித்து வந்தபோதும் படங்களின் தோல்வி அவரது நம்பிக்கையை தகர்த்து விட்டன. அதனால் மறுபடியும் காமெடி அரிதாரம் பூசியுள்ளார் அவர்.

அந்த வகையில், டார்லிங், கொம்பன் படங்கள் காமெடியனாக மறுபிரவேசம் செய்துள்ள கருணாஸ், தற்போது மேலும் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில், இனிமேல் காமெடி பயணத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கருணாஸ், அதற்கு முன்னணி ஹீரோக்களின் அரவணைப்பும் தேவை என்பதால், தான் நடித்து வரும் படங்களின் ஆடியோ விழாக்களில் அப்பட ஹீரோக்களை வஞ்சனையில்லாமல் புகழ்ந்து தள்ளுகிறார். அதைக்கேட்டு சில சமயங்களில் மேடையில் அமர்ந்திருக்கும் ஹீரோக்கள் தடுமாறிப்போகிறார்கள்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions