காமெடி கிங் கருணாஸ்க்கு 44வது பிறந்தநாள்!

Bookmark and Share

காமெடி கிங் கருணாஸ்க்கு 44வது பிறந்தநாள்!

இயக்குநர் பாலாவின், 'நந்தா' படத்தில் 'லொடுக்கு' பாண்டியாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். முதல்படத்திலேயே அவரது காமெடி எல்லோரையும் ரசிக்க வைத்தது. தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்த கருணாஸ், தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

காமெடி நடிகராக மட்டுமல்லாது திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 4 படங்களுக்கு இசையமைத்துள்ளார், 5 படங்களை தயாரித்துள்ளார், 40 படங்களை விநியோகமும் செய்துள்ளார். நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட கருணாஸ்க்கு சமீபத்தில் வெளிவந்த, ’டார்லிங்’ படம் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இன்று(பிப்., 21ம் தேதி) கருணாஸ்க்கு 44வது பிறந்தநாள். அவர் நடித்துள்ள 100வது படமான கொம்பன் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் 44வது பிறந்தநாளை கொண்டாடும் கருணாஸ் நம்மிடம் பேசுகையில், நடிகராக இருந்த நான் இடையில் ஹீரோ, தயாரிப்பு என பிற துறைகளில் கவனம் செலுத்தியதால் இடையில் கொஞ்சம் சறுக்கல்.

இனி மற்ற துறைகளுக்கு தாவாமல் முழுக்க முழுக்க காமெடி மற்றும் நல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். சமீபத்தில் வெளியான டார்லிங் படத்தில், ஞானவேல்ராஜா, ’காமெடி கிங்’ கருணாஸ் என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தி எனக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தார்.

இனி அதை அப்படியே தொடர இருக்கிறேன். மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, காமெடியில் கிங்காக வலம் வரவே ஆசைப்படுகிறேன். இங்கு நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு ரசிகர்களுக்கும், என் வளர்ச்சியில் என் பெயர் சொல்கிற அத்தனை இயக்குநர்களுக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி சொல்கிறேன். இவ்வாறு கருணாஸ்


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions