அப்பாவுடன் நடிக்கும் கருணாஸ் மகன்

Bookmark and Share

அப்பாவுடன் நடிக்கும் கருணாஸ் மகன்

நகைச்சுவை நடிகர்களில் தனக்கு என்று தனிபாணியை கடைபிடிப்பவர் கருணாஸ். நந்தா படத்தில் இவர் நடித்த ‘லொடுக்குபாண்டி’ கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த கருணாஸ் தற்போது நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் குணச்சித்ர வேடங்களில் நடித்து இருக்கிறார். இதில், கருணாசுடன் அவரது மகன் கென் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் 5 சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் செய்யும் குறும்பும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. இவர்களில் ஒருவராக கருணாஸ் மகன் கென் நடித்திருக்கிறார்.

இதுபற்றி சிறுவன் கென்னிடம் கேட்டபோது, ‘‘இந்த படத்தில் நடிக்கும் 5 சிறுவர்களில் நானும் ஒருவன். டைரக்டர் சார்லஸ் சார் எங்களை மிகவும் சிரமப்பட்டு நடிக்க வைத்தார்.
எங்களிடம் மிகவும் அன்பாக பழகினார். படப்பிடிப்பின் போது நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்தோம். கலகலப்பாக பழகினோம். படப்பிடிப்புக்கு போனது சுற்றுலா சென்றது போல இருந்தது.

எனது அப்பா நடிக்கும் படத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் எங்கள் மீது அக்கறை காட்டினார்கள். இந்த படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். டைரக்டர் சொன்னபடி நடித்தேன். நான் தொடர்ந்து நடிப்பது பற்றி அப்பா தான் முடிவு செய்வார்’’ என்று சொல்லிட்டு கள்ளமில்லாமல் சிரித்தார் கென்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions