கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் லொடுக்கு பாண்டி

Bookmark and Share

கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் லொடுக்கு பாண்டி

காமெடி நடிகர் கருணாஸ் அறிமுகமான ‘நந்தா’ படத்தில் அவரது கதாபாத்திரம் ‘லொடுக்கு பாண்டி’. அந்த கதாபாத்திர பெயரையே தலைப்பாக வைத்து புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது.

இதில் கதாநாயகனாக கருணாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். மேலும் இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ரஜனீஷ். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்காக ரூ.15 லட்சம் செலவில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே! நிரந்தரமல்ல என்கிற கருத்தை மையமாக வைத்து காமெடியாக உருவாக்கி இருக்கிறார்கள். படத்திற்கு ஒளிப்பதிவை ஜெய் ஆனந்தும், இசையை எம்.எஸ்.தியாகராஜனும் கவனிக்கிறார்கள். வி விக்டரி கிரியேஷன்ஸ் மற்றும் ஜி பிக்சர்கள் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions