கருணாஸ்க்கு பிறந்தநாள் பரிசளித்த நேகா!

Bookmark and Share

கருணாஸ்க்கு பிறந்தநாள் பரிசளித்த நேகா!

கருணாஸ், தற்போது தான் நடித்து வரும் படங்களில் மிகவும் கவனமாக தன்னுடைய பாத்திரங்களை தேர்வு செய்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த டார்லிங் படம் பேசப்பட்டது. அடுத்து திரைக்கு வர உள்ள படம் லொடுக்கு பாண்டி.

இதில் நகைச்சுவை கலந்த நாயகனாக நடித்திருக்கிறார் கருணாஸ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நேகா சக்சேனா. இவருக்கு படபிடிப்பின் போது நடிப்பு பற்றி பாடம் எடுப்பதுடன் இண்டஸ்ரியில் உள்ள நெளிவு, சுழிவுகளையும் சொல்லி கொடுத்தருக்கிறார் கருணாஸ்.

இதனால், கருணாஸ் மீது மரியாதை அதிகமாக உண்டாகி விட்டதாம். இதை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவது கருணாஸ்க்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார். இதை வெளிப்படுத்தும் விதமாக கருணாஸ் பிறந்தநாள் இன்று வந்திருக்கிறது.

அப்போது நேகா சக்சேனா பளபளப்புடன் பாய்ந்து செல்லும் கண்ணாடி குதிரை ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளராம் நேகா. இதற்கான அர்த்தத்தை கேட்டபோது காரணம் எதுவும் இல்லை பார்ப்பதற்கு அழகாக இருந்தது, வாங்கினேன் பாஸ் என்றாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions