சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?

Bookmark and Share

சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?

தமிழக அரசியல் நிலவரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பாகவே உள்ளது. ஆளும்கட்சியான அதிமுக மூன்றாக உடைந்துள்ளது.

இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்ப்பில் இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இன்று சசிகலா ஆதரவாளராக இருக்கும் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் சந்தித்து பேசியுள்ளார்.

இவர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறுகையில், ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். தமிழக அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. நவீன தொழில் நுட்பத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பாட்ஷா திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதால் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறினேன்.

மேலும் ரஜினியின் ரசிகன் என்பதால் சந்தித்தேன். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை தேவையற்றது என்றும் பதவியில் இருக்கும் போது செய்யாமல் இப்போது விசாரணை கேட்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிக சர்ச்சைகளில் சிக்கிவரும் கருணாஸ் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions