3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்: கருணாஸ் பேட்டி

Bookmark and Share

 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்: கருணாஸ் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது தொடர்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிடாய் வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் கருணாஸ், செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், நடிகர் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டு, காட்டு முனியப்பனுக்கு 51 தேங்காய் உடைத்தனர். 

இதைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினர். நிகழ்ச்சியில் காந்தி, காஜா, மதுரை விஸ்வநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 

எங்களை வெற்றி பெற வைத்த அனைத்து நாடக நடிகர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். தற்போது நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நாங்கள் சந்தித்தபோது முதன்மையான தேர்தல் வாக்குறுதி என்னவென்றால் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதுதான். அதன்படி தற்போது தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம். 

இப்போது தான் முன்னாள் தலைவர் சரத்குமார், தற்போதைய தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷாலிடம் நடிகர் சங்கத்திற்கான பத்திரங்களை வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து சத்யம் நிறுவனத்தினரிடம் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான பணிகளை தலைவர் மற்றும் எங்களின் வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு முதல் முறையாக நடிகர் சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. 

வரக்கூடிய ஆண்டுகளில் மறைந்த நடிகர், நடிகைகளுக்கு எங்களின் தலைமை அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கி அவர்களின் நினைவு தினங்களில் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு முழுமையான கருத்துக்களை தெரிவிக்க கூடிய அதிகாரம் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions