விஷால் ஆந்திரா செல்லட்டும்: மல்லுக்கட்டும் கருணாஸ்

Bookmark and Share

விஷால் ஆந்திரா செல்லட்டும்: மல்லுக்கட்டும் கருணாஸ்

சிவகங்கை;''தமிழர்களுக்கு விரோதமாக பேசும் நடிகர் விஷால் ஆந்திரா செல்லட்டும்,” என, அவரது 'பாண்டவர் அணி' நண்பர் கருணாஸ் எச்சரித்தார்.

சிவகங்கை அருகே பனங்காடியில் நேற்று, நடிகர் கருணாஸ் தலைமையில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடக்க இருப்பதாக தகவல் பரவியது. அங்கு டி.எஸ்.பி., மங்களேஸ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.கருணாசிடம் போலீசார்,

'அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துவிட்டு, நீதிமன்ற தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினால் எம்.எல்.ஏ., பதவிக்கு ஆபத்து' என, எச்சரித்தனர்.இதையடுத்து அவர், ''நான் மஞ்சுவிரட்டுக்கு வரவில்லை. 

நண்பரை காண வந்தேன்,'' என 'பல்டி' அடித்தார்.அவர் கூறியதாவது: 'பீட்டா'வுக்கு ஆதரவாக பேசும் திரிஷாவின் திரைப்படத்தை ஓடவிடக் கூடாது. நடிகர் விஷால் 'பீட்டா'வுக்கு' ஆதரவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழ் படங்களில் நடித்து தான் பிரபலம் ஆனார். தமிழர்களுக்கு விரோதமாக பேசும் அவர் ஆந்திரா செல்லட்டும்.

இவ்வாறு கூறினார்.நடிகர் சங்க தேர்தலில் 'பாண்டவர் அணி' என இணைந்து செயல்பட்ட விஷால், கருணாஸ் இடையே தற்போது மோதல் உருவாகி உள்ளது. இது நடிகர் சங்கத்திலும் எதிரொலிக்குமோ என நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions