"தல" அஜித் குறித்த சர்ச்சையால் கமிஷ்னரிடம் புகார் கொடுக்கும் கருணாஸ்

Bookmark and Share

சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'பாண்டவர் அணி என்று இனி எங்களை அழைக்காதீர்கள்' என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். 

ஆனால் இந்த மீட்டிங்கிற்கு கருணாஸ் மட்டும் வரவில்லை. இந்த சந்திப்பில் தலைவர் நாசர் கூட பாதியிலேயே எழுந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதற்கு பின்னணியில் என்ன என்பதை விசாரித்தால் நாசர் எஸ்கேப்புக்கு காரணம் ரஜினி குறித்து அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைகள் தானாம். 
 
இதையடுத்து கருணாஸ் அவரது  டிவிட்டர் பக்கத்தில் அஜித் குறித்து ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைக்கப்போவதில்லை.

எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது." என்று கூறியிருக்கிறார். தற்போது அது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 

இது குறித்து கருணாஸ் அளித்த விளக்கம்:

என்னுடைய டிவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தைப் பற்றி நான் அவதூறான செய்திகளை கூறியதாக நேற்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ விஷமிகள் என்னுடைய டிவிட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்ப காலம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடனும் நட்பாகவே பழகி வருகிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ கால்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இது பற்றி இன்று கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன். என்னை பற்றிய தவறான செய்தியை கேள்விப்படும் போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியப்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions