டைரக்டர் கார்வண்ணன் திடீர் மரணம்: திரையுலகினர் அஞ்சலி

Bookmark and Share

டைரக்டர் கார்வண்ணன் திடீர் மரணம்: திரையுலகினர் அஞ்சலி

‘பாலம்’ படத்தை டைரக்டு செய்தவர் கார்வண்ணன். தொண்டன், ரிமோட், புதிய காற்று, 3–ம் படி படங்களை தயாரித்து இயக்கி இருந்தார். ஞானப்பழம் படத்தில் பாக்கியராஜ் தந்தையாக நடித்து இருந்தார்.

கார்வண்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

கார்வண்ணன் உடலுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர் ராதா கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன் மற்றும் ரிஷிராஜ், சவுந்தர் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள். குடும்பத்தினரிடம் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியும் வழங்கினர். இன்று மாலை இறுதி சடங்கு நடந்தது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions