காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!

Bookmark and Share

காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 28-ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். எனினும் கார்த்திக்கு இப்படத்தில் ஜோடி இல்லையாம். அவர்கள் இருவருமே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக 90 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதற்கான வேலைகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
காஷ்மோரா சென்னை வசூல் விவரம் இதோ!
இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!
உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா
அதென்ன காஷ்மோரா – படக்குழு விளக்கம்!
காஷ்மோரா தமிழ் சினிமாவுக்கு புதிய படம்!
காஷ்மோரா ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
காஷ்மோரா ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions