காஷ்மோராவை ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிட்ட கார்த்தி!

Bookmark and Share

காஷ்மோராவை ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிட்ட கார்த்தி!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு மிகவும் சவாலான படமாக இப்படம் அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். நயன்தாரா இப்படத்தில் இளவரசி ரத்தின மகாதேவி எனும் கேரக்டரில் நடித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions