செக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

Bookmark and Share

செக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

சினிமா பைனான்சியர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா. இவரிடமிருந்து, இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கடந்த 2012-ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார்.

இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கஸ்தூரி ராஜா வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து, அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜ் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் வரும் 13-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions